மர்ம நபர்கள் பள்ளியில் நுழைந்து பாட புத்தகங்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருப்பதனால் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்குச் சென்று அறையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் 6-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 140 திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தலைமையாசிரியர் கொடுத்த புகாரின்படி, சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.