Categories
உலக செய்திகள்

இதைவிட பெரிய கிரகம்…. ஒன்றரை மடங்கு பெரியது…. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு….!!

வியாழன் கிரகத்தை காட்டிலும் பெரிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

வியாழன் கிரகத்தை விட மிகப்பெரிய மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹவாய் தீவில் உள்ள கெக் ஆய்வு மையத்தின் மூலமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது 6 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பிரம்மாண்டமான கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கிரகம் வியாழன் கிரகத்தை விட ஒன்றரை மடங்கு பெரியதாக இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த கிரகம் இறந்தபோன கிரகம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |