Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எத்தனை தடவ சொல்லியும் கேட்கல …. வசமாக மாட்டிக்கொண்ட சகோதரர்கள் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த சகோதரர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் (25), சூர்யா (24) என்ற       2 சகோதரர்கள் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் திருவள்ளூர் தாலுகா போலீசார் இதற்கு முன்பாகவே இருவரையும் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் சகோதரர்கள் இருவரும்  தொடர்ந்து கஞ்சா விற்று வந்தது போலீசாருக்கு தெரிந்துள்ளது.  இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் சகோதரர்கள்  இருவரையும்  மீண்டும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் .

ஆனால் பலமுறை போலீசார் எச்சரித்தும் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் சகோதரர்கள் இருவரையும்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் , மாவட்ட ஆட்சியர் டாக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு  பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 2 பேரையும்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் மத்திய சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டனர் .

Categories

Tech |