Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்கல… கணவரின் மூர்க்கத்தனமான செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெண் உட்பட மூன்று பேரின் மீது திராவகத்தை  வீசி விட்டு  தப்பிச் சென்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அசோக் நகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே மாலாவிற்கும் தபால்தந்தி பகுதியில் வசிக்கும் சூசை மச்சாது என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கத்தினால் ரவி மற்றும் மாலாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இனிமேல் சூசையுடன் பேசக்கூடாது என்று ரவி தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் மாலா அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரவி வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்ற போது தனது மனைவி மற்றும் சூசை மச்சாது ஆகிய இரண்டு பேரும் வீட்டின் முன் பகுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனைப் பார்த்து கோபமடைந்த ரவி நான் பலமுறை சொல்லியும், அதை ஏற்காமல் மீண்டும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறாயா என்று கூறி தனது வீட்டில் உள்ள திராவகத்தை எடுத்து அவர்கள் இருவரின் மீது ஊற்றி விட்டார். அப்போது அங்கு சூசையின் மகனான கெல்வின் என்பவர் சென்ற போது அவரின் மீதும் ரவி திரவத்தை ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால்  உடல் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டதால் அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து உடனடியாக அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திராவகத்தை மனைவி, சூசை மற்றும் அவரின் மகனின் மீது ஊற்றி விட்டு தப்பி ஓடிய ரவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |