Categories
சினிமா தமிழ் சினிமா

“எத்தனை கோடி கொடுத்தாலும் அது மட்டும் முடியாது”….. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி திடீர் முடிவு?… சோகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் மாடலான நடிகை ஊர்வசி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சரவணன் அருள் தான் தயாரித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி பெரிதாக எடுபடவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சரவணன் அருள் இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய சரவணா ஸ்டோர் அண்ணாச்சியான சரவணா அருள் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எத்தனை கோடி கொடுத்தாலும் ஓடிடி தளங்களுக்கு தனது படத்தை விற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளாராம். ஓடிடியில் படத்தை காணலாம் என்று இருந்த ரசிகர்கள் சரவணன் அருளின் இந்த முடிவால் சோகம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |