Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எத்தனை பேர் பயணித்தார்களா…? பின்பற்றப்படும் வழிமுறைகள்….!!

அரசு டவுன் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமின்றி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 227 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அரசின் அறிவிப்பின்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிக்கும் ஒருவர் போன்றோர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

எனவே டவுன் பேருந்துகளில் கட்டணம் இன்றி எத்தனை நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்கும் விதமாக விரைவில் அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மண்டலத்திலிருந்து இயங்கிய டவுன் பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணித்த ஒருவர் ஆகியோருக்கு கட்டணமின்றி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.

Categories

Tech |