Categories
உலக செய்திகள்

இதனாலதான் வேண்டான்னு சொல்றோம் ….. கால்பந்து ரசிகர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள் ….!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜூன்  11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து அணி ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடும் போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது அங்கு கொரோனா தொற்று  பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை புதிதாக 1503 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து கால்பந்து ரசிகர்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரும்,மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறும்போது ,’செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் அனைவரும் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார் .மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ரஷ்யாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .

Categories

Tech |