இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.இதனிடையே இதுகுறித்து அவர் கூறும்போது,” என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று .உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதை என்னால் நம்ப முடியவில்லை .அதுவும் இந்த சாதனையை பிறந்த ஊரிலேயே நிகழ்த்திய வகையில் நான் அதிர்ஷ்டசாலி .இது எனக்கு மட்டும் இல்ல என்னுடைய குடும்பத்திற்கும் இது மிகச் சிறந்த தருணம் ஆகும். ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக என் குடும்பத்தினர் இங்கு வரமுடியவில்லை .
போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் வான்கடே ஸ்டேடியத்தில் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய வீரர்களின் பெயர் பதித்திருந்த போர்டை பார்த்தேன் .அதில் என்னுடைய பெயரும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன் .ஆனால் இப்படி ஒரு சிறப்போடு என் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கவில்லை .இதற்கு முன்பாக அனில் கும்ப்ளே 10 விக்கெட் வீழ்த்திய வீடியோ காட்சியை பலமுறை பார்த்து உள்ளேன் .அவருடைய வார்த்தைகளும் ,பாராட்டும் என்னை நெகிழ வைக்கிறது .10 விக்கெட் சாதனை பட்டியலில் அவருடன் பணிவோடு இணைகிறேன் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.