Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இதற்காக வீடு தேடி போகும் திட்டத்தை கைவிடனும்” செவிலியர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவரான கோகிலா, செயலாளரான உமாமகேஸ்வரி உட்பட செவிலியர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி பணியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மேற்கொள்வதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஆகவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். அதன்பின் தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இதனைதொடர்ந்து தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர். .

Categories

Tech |