சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் நடிகை அமலாபால் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலாபால் மிகவும் தைரியசாலி. அவரது வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து சினிமா பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் இணையதளத்தில் தனது நேரத்தை அதிகமாக செலவழித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கண்ணீருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதோடு ஷக்ஷீகா என்ற புதுவித உணவு சமைக்கும் முயற்சிக்கு வெங்காயம் வெட்டிய போது தனக்கு கண்ணீர் வந்தது என வேடிக்கையான காரணத்தை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இதற்கு வேறு எதுவும் வழி இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். எத்தகைய தைரியமானவராக இருந்தாலும் வெங்காயத்தை நறுக்கும் போது கட்டாயமாக கண்கலங்க தான் செய்யும் என்று மீம்ஸ் கிரியேடர் அமலாபாலை தொடர்ந்து கிண்டலடித்து பல்வேறு நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.