தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி தலைமையில் தசரா திருவிழா மற்றும் சூரசம்ஹாரத்தை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மேலும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்திய 18 பெண்கள் உட்பட 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.