Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதற்கு நீதான் காரணமா…? 4 மாத கர்ப்பிணியின் விபரீத முடிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்காயனூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்ப நகர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா கடந்த 21-ஆம் தேதி கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த வனிதாவின் உறவினர்கள் குறிஞ்சிநகர் சுங்கசாவடி முன்பு ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி வனிதாவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து வனிதாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு திருமணம் முடிந்த 6 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி வனிதா இறந்தது குறித்து உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை மேற்கொண்டார். அப்போது வனிதா இறந்ததற்கு அவரது கணவர் மாணிக்கவாசகம் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரரான மாணிக்கவாசகத்தை கைது செய்தனர்.

Categories

Tech |