பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை வாத்தியார் கோணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்ற போது கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மானிட்டர், கீபோர்ட், மவுஸ் போன்ற கம்ப்யூட்டர் உபகரணங்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகின்றது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜான் லத்தீஸ் கொடுத்த புகாரின்படி கருங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.