பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ,ஜடேஜாவுக்கு நிர்ணயித்துள்ள பிரிவு, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிசிசிஐ அக்டோபர் 2020 – செப்டம்பர் 2021 வரையிலான இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை ,சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்தப் பட்டியலில்’ ஏ ப்ளஸ்’ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ரூபாய் 7 கோடி ஊதியமாகவும், ‘ ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 5 கோடி ஊதியமாகவும், இதைத்தொடர்ந்து ‘பி ‘மற்றும் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற வீரர்களுக்கு தலா 3 மற்றும் 4 கோடி ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட ‘ஏ ப்ளஸ் ‘ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள், டெஸ்ட் போட்டி ,ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டி ,ஆகிய மூன்று போட்டிகளிலும் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு ‘ஏ ப்ளஸ்’ பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கு பெற்ற ரவீந்திர ஜடேஜா ‘ஏ ப்ளஸ்’ பிரிவில் இடம்பெறவில்லை . இதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதைக்குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன் , ‘ஏ ப்ளஸ்’ பிரிவில் ஜடேஜவை சேர்க்காதது அவமானமாக உள்ளதாக ,டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான எம்.எஸ்.கே பிரசாத் கூறியபோது , தகுதியான ஜடேஜாவிற்கு ,’ஏ ப்ளஸ்’ பிரிவில் தேர்ந்தெடுக்காததற்கு காரணம் தெரியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.