Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெறப்பட்ட புகார்…. இதெல்லாம் சரி பண்ணுங்க…. கலெக்டரின் உத்தரவு….!!

கால்வாய்கள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைக்கும்படி கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதாக கலெக்டருக்கு புகார்கள் பெறப்பட்டது . இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் பகுதியை ஆய்வு செய்து குப்பைகள் அடைத்துக் கொண்டு, சாக்கடை நீர் போகாமல் இருந்ததை தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அங்கிருந்து அவர் அபாய் தெருவிலுள்ள வெள்ள கால்வாய், அப்துல்மாலிக் தெரு, பெரியார் நகர் பகுதியில் உள்ள பெரிய கால்வாய் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு அனைத்து பகுதி கால்வாய்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை எந்திரங்களைக் கொண்டு தூர்வார வேண்டும் என்றும்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கால்வாய்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை நீர் உடனடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் இடத்திற்கு செல்வதற்கு நகராட்சி பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அபாய் தெருவில் குடிநீருடன் கழிவுநீர் சேர்ந்து கலப்பதாக பெறப்பட்ட புகார் குறித்து உடனடியாக சீர்  செய்து தரப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன் பின் 36 வார்டுகளுக்கு தினசரி வழங்கப்படும் குடிநீர் குறித்து தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும் மாதேஷ் என்ற துப்புரவு ஆய்வாளர் வேலைக்கு வராமல் இருப்பதற்கு மெமோ கொடுக்க வேண்டும் என்றும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சிகளில் இருந்து ஜலகாம்பாறை வழியாக வெங்காயப்பள்ளி வரை 82 லட்சம் ரூபாய் செலவில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Categories

Tech |