Categories
உலக செய்திகள்

“பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகள்”…. 400 கி.மீ தொலைவிலேயே அழித்து விடும்…. வசமா செக் வைத்த இந்தியா….!!!!

ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய S – 400 எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

எதிரி நாடுகளிலிருந்து பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகளை வரும் வழியிலேயே கண்டுபிடித்து சிதற அடிக்க S – 400 என்ற அதிநவீன வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யா உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா இந்த மாத தொடக்கத்தில் வாங்கியு உள்ளது. அவ்வாறு வாங்கிய S – 400 வான் பாதுகாப்பு சாதனங்களின் முதல் பிரிவை பஞ்சாப் பகுதியில் இந்திய விமானப்படை நிறுத்தி வைத்துள்ளது.

பஞ்சாப் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலமாக பாகிஸ்தான் மற்றும் சீனப் பகுதிகளில் இருந்துவரும் ஏவுகணைகளை தடுக்க முடியும் என விமானப்படை தெரிவித்துள்ளது. 400 கிலோ மீ தொலைவுக்கு முன்பே ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் வல்லமை வாய்ந்தவை S- 400 வான் பாதுகாப்பு சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |