Categories
உலக செய்திகள்

தைவானில் வெளியானது எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கான முடிவு….. வெற்றி பெற்றவர் யார் தெரியுமா..?

தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் தற்போதைய தலைவர் ஜாணிஜியங் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் புதிய தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வெண்ணுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய எரிக் சூ தற்போது வெற்றி பெற்றுள்ளார். சாய் இங் வெண் மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட அரசியல் சாசன சட்ட ரீதியாக தடை உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2024 அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் எரிக் சூ வேட்பாளராக தேர்ந்தெடுக்க பட வாய்ப்புள்ளது.

மேலும் தைவான் அரசு சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிவருகிறது. இதை ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி ஏற்றுக்கொள்ளாத நிலையில் எதிர்க் கட்சியான தேசியவாத கட்சி சீனாவுடன் நெருங்கிய உறவை ஆதரித்து வருகிறது. மேலும் சீன அரசு ஐநா சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் இருந்தும் தைவானை விலக்கி வைப்பதை வாடிக்கையாக செய்து வருகிறது. இதனையடுத்து சாய் இங் வெண் 2016இல் முதன்முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தைவான் உடனான அனைத்து முறையான தொடர்புகளையும் சீனா ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சீன அரசு தைவானை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வான் எல்லைக்குள் போர் விமானங்களையும் அனுப்பி வருகிறது. மேலும் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |