எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.
நேபாள நாட்டில் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே.பி. ஷர்மா ஒலி மக்களிடம் ஆற்றிய உரையில் கூறும்போது,” மக்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் போட்டி போடுவது வீரர்களின் பணி என்றும், அந்த போட்டியை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வது நடுவருடைய பணியாகும் என்று குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் நடுவராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்க் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது “என்று அவர் கூறினார். இதையடுத்து நேபாள நாட்டில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து வருகின்ற நவம்பர் மாதத்தில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்று கே.பி. ஷர்மா உத்தரவிட்டிருந்தார் . இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும், நாட்டின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான சேர் பகதூர் தாபா நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.