பைக் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் அஜித் அடுத்து உலக பயணத்தை தொடர உள்ளார். இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தில் அவருடன் இருந்த நண்பர் உதயகுமார், அஜித் உடன் நடந்த உரையாடல் பற்றி தன் சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது “எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் போன்றவற்றை எப்படி எதிர் கொள்கிறார் என அஜித்திடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் ஒரு குட்டி ஸ்டோரியை கூறினார். அதாவது, இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளை கொல்வதை நிறுத்தும்படி கசாப்பு கடைக்காரரிடம் கோரிக்கை வைப்பதை போன்றது. அவ்வாறு கூறினால் அவர் அசைவ பிரியர்களும் இங்கே இருக்கின்றனர், அதற்கு சந்தை இருக்கிறது என்று நிச்சயமாக பதிலளிப்பார்.
அதேபோன்று சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்தகைய ட்ரோல்களையும், எதிர்மறை விமர்சனங்களையும் விரும்புகின்றனர். மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்காத வரை இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்று அஜித் கூறினார்” என உதயகுமார் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.