Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல் சீரியல் இணைந்துள்ள பிரபல நடிகை…. தனுஷ் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் நாயகியா….!!

திருசெல்வம் அவர்கள் கதை எழுதி தயாரிக்கும் ஒரு சூப்பரான சீரியல் தான் எதிர்நீச்சல்.

சன் தொலைக்காட்சியில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட தொடர் தான் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த தொடர் மூலம் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை கனிகா. இவரைத் தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் ஹரிபிரியா போன்ற நாயகிகளும் நடிக்கின்றார்கள். பெண்கள் குடும்பம் என இருக்காமல் தைரியமாக திருமணத்திற்கு பிறகும் சொந்த காலில் நிற்க வேண்டும் என பல நல்ல விஷயங்களை இந்த சீரியல் எடுத்து சொல்கிறது.

தற்போது இந்த தொடரில் புதியதாக டான்சர் ஹேமா டயால் நடிக்க இருக்கின்றாராம். இவர் தனுஷின் ரகிட ரகிட பாடலில் இவரது நடனம் மற்றும் கியூட்டான முக பாவனைகளை பார்த்து ரசிகர்கள் நிறைய மீம்ஸ் போட்டு வந்துள்ளனர். இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |