Categories
உலக செய்திகள்

இந்த அமைப்பிற்கு எதிர்காலம் கிடையாது…. முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ள கூட்டம்…. எதிர்ப்பு தெரிவித்த சீனா…!!

இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்து கொண்டு வருகின்ற 24 ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து நடைபெறவுள்ள குவாட் என்ற அமைப்பின் கூட்டத்திற்கு சீன அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்துகொண்ட குவாட் என்ற அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு நடைபெறும் கூட்டத்திற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

அதாவது சீன நாட்டின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் 4 முக்கிய நாடுகள் சேர்ந்து கலந்து கொள்ளும் குவாட் என்ற அமைப்பிற்கு எதிர்காலம் கிடையாது என்று தன் நாட்டின் எதிர்ப்பை தெரியப்படுத்தும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் குவாட் கூட்டமைப்பில் கலந்துகொள்ளவுள்ள இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் குறைந்த மனப்பான்மையை கொண்ட அரசியல் போட்டியை கைவிட்டுவிட்டு மக்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |