Categories
உலக செய்திகள்

மக்களின் உயிர்பலிக்கு காரணமான பிரதமர்.. பொது தேர்தலுக்காக தீவிர பணிகள்..!!

எத்தியோப்பியாவில் ஒரு மாகாணத்தில் ராணுவத்தை இறக்கி, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ளார்.

எத்தியோப்பியாவில் Abiy Ahmed கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து பிரதமராக உள்ளார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் 547 தொகுதிகளில் அதிகமானவற்றை வென்று ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதாவது பொதுத்தேர்தல் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தப்பட வேண்டியது.

கொரோனா காரணமாக தற்போது நடைபெறவுள்ளது. EPRDF என்ற கட்சி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 547 தொகுதிகளையும் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்பு Abiy Ahmed கூட்டணி கட்சிகளின் ஆட்சியை கலைத்துவிட்டார். அதனையடுத்து புதிய கட்சி ஒன்றை துவக்கி, ஆட்சியை தொடர்ந்தார்.

எனினும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கியதால், கடந்த 2019 ஆம் வருடத்தில் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றார். இந்நிலையில் 2020 ஆம் வருடத்தில் Tigray மாகாணத்தில் TPLF கட்சியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ராணுவத்தை இறக்கியிருக்கிறார்.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர். மேலும் அங்கு பசி மற்றும் பஞ்சம் ஏற்பட்டது. தற்போது அந்த மாகாணத்தில் பாதுகாப்பில் அச்சம் இருக்கிறது என்று தேர்தல் நடத்தப்படவில்லை.

Categories

Tech |