போலீசில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பாக போராட்டம் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் போலீசில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடைதினர். இதனைத்தொடர்ந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி சண்முகம், பாலசுப்பிரமணி, ராஜன் தேவி வேலுசாமி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.