யாரென்று தெரியாமலே ஆன்லைன் வாயிலாக பெண் காதலித்து ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய வானொலி ஒன்றில் தொகுப்பாளினியாக கீரத் அஸ்ஸி வேலை பார்த்தார். இவர் தன் தூரத்து உறவினரான சிம்ரன் போகல் என்ற பெண் மூலமாக பேஸ்புக்கில் பாபி என்பவருடன் அறிமுகமாகி பழக தொடங்கியுள்ளனர். இதனையடுத்து கீரத் ஒன்லைன் மூலமாக நெருக்கமாகி நிர்வாணப்படங்கள் அனுப்புவது வரை அவர்களது உறவு வளர்ந்துள்ளது. இவ்வாறு பல வருடங்கள் இவர்களின் உறவு தொடர்ந்த நிலையில் நேரடியாக பாபியை பார்ப்பதற்காக கீரத் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாபி, கீரத்தை யாரோ தெரியாத நபர் போல் பாவித்து பேசி இருக்கின்றார். அந்த வேளையில் வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்ணும் சிறுவனும் வெளியே வர அவர்கள் பாபியின் மனைவியும், மகனும் என்பதை கீர்த் அறிந்து கொண்டார். இதனால் பாபி தன்னை ஏமாற்றி விட்டதாக கீரத் நினைத்து இருக்கிறார். அப்போது சரி நீங்கள் என் சகோதரன் என்று எண்ணி தன்னிடம் பேசுகிறீர்கள் போல என்று பாபி கீரத்திடம் கூறியுள்ளார்.
அதற்கு கீரத், பாபி அனுப்பிய அவரது புகைப்படங்களை காட்டி இருக்கிறார். இதன் காரணமாக அவரது வீட்டில் பிரச்சினை உருவாகி ஆத்திரமடைந்த பாபி காவல்துறையினரை அணுகியுள்ளார். இதில் மேலும் குழப்பமடைந்த கீரத் அவரது வீட்டிற்கு திரும்பினார். ஆகவே இத்தனை வருடங்களாக ஏமாற்றப்பட்ட விடயம் கீரத்துக்கு தெரியவந்துள்ளது. இதற்கு முன்பாக கீரத் வீட்டிற்கு தன் உறவினர்களுடன் வந்த சிம்ரன் ஒரு விடயத்தை அவரிடம் கோரியுள்ளார்.
அதில் மயங்கி விழுந்த கீர்த் ஏமாற்றமடைந்தது தெரியவந்தது. அதாவது நடந்தது என்னவென்றால் “பாபி என்று ஒருவர் இருக்கின்றார். ஆனால் அவருக்குக் கீரத்தை யாரென்று தெரியாது. இவர்களில் சிம்ரன் என்ற பெண் பாபியின் பெயரைப் பயன்படுத்தி போலியாக அவரது பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி இத்தனை வருடங்களாக கீரத்தை ஏமாற்றி இருக்கின்றார். ஆகவே இத்தனை வருடங்களாக உருகி உருகி காதலித்தது ஒரு ஆணை அல்ல என்பதை கீரத் உணர்ந்து கொண்டார். இதுதொடர்பாக கீரத் காவல்துறையினரிடம் சென்றபோது அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை.
இதனைத்தொடர்ந்து கீரத், சிம்ரன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே செட்டில் பண்ணப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சிம்ரன் கீரத்திடம் மன்னிப்புக் கோரி இருந்த நிலையில் என்ன செட்டில்மெண்ட் என்பது வெளியிடப்படவில்லை. இதுகுறித்து கீரத் கூறியபோது “எனக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இதை யாரும் முக்கியமாக எடுக்க மாட்டேன்கிறார்கள். இந்த சம்பவத்தினால் என் 10 வருடம் வாழ்க்கை வீணாக போய் விட்டது. ஆகவே தன்னைப்போல் மற்றவர்கள் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக தன் கதையை வெளியுலகத்திற்கு தெரிவித்து இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.