Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது பஸ்சில் இருக்கா…? தேடி பார்த்த யானை…. பின் நடந்த சம்பவம்….!!

பஸ்சின் கண்ணாடியினை யானை நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினில் பெரும்பாலான காட்டு யானைகள் வசித்து வருகின்றது. இங்கு சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையானது செல்கிறது. இந்த சாலையில் தினசரி யானைகள் உலா வந்து அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்துத் தின்பதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பேருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்தது.

அப்போது குட்டியுடன் யானை சாலையின் நடுவே நின்று கொண்டிருந்ததால் அதை பார்த்ததும் டிரைவர் அச்சத்தில் பேருந்தை தூரத்தில் நிறுத்தினார். இதனால் பயணிகள் உட்பட யாரும் பேருந்தை விட்டு கீழே இறங்கவில்லை. அதன்பின் குட்டியுடன் யானை பேருந்து அருகில் சென்று டிரைவர் இருக்கை அருகில் துதிக்கையால் மேலும் கீழும் தடவியபடி கரும்புகள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தது. ஆனால் கரும்புகள் இல்லாததால் டிரைவர் இருக்கை அருகே பொருத்தப்பட்ட பக்கவாட்டு கண்ணாடியை யானை துதிக்கையால் உடைத்து சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து யானை அந்த குட்டியுடன் வனப்பகுதிக்குள் சிறிது நேரம் கழித்து சென்று விட்டது. இதனை பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

Categories

Tech |