Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது எங்களுக்கு ஏமாற்றம்தான் ” ….! தோல்விக்கு காரணம் இதுதான் – பொல்லார்டு …..!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது .

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாய சூழலில் இலங்கை அணியை எதிர்கொண்டது.ஆனால் இப்போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மையர் ,நிக்கோலஸ் பூரன் ஆகிய இருவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து. இதனிடையே  தோல்வி குறித்து அணியின் கேப்டன் பொல்லார்டு கூறும்போது,” அணியில் இளம் வீரர்கள் கடுமையாக முயற்சித்தனர். ஆனால் என்னையும் சேர்த்து அனுபவ வீரர்கள் யாரும் போட்டியில் சிறப்பாக செயல்பட வில்லை .இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை நாங்கள் மறைக்க போவதில்லை “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |