Categories
தேசிய செய்திகள்

“இது என்ன கொடுமையா இருக்கு”…. ஒரு வாலிபருக்காக 2 பெண்களின் செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஒரு வாலிபருக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் அனகாபல்லி பகுதியில் வாலிபருடன் மாணவி ஒருவர் சென்றுள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் வெவ்வேறு பள்ளியில் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவிகள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் எச்சரித்து அனுப்பிய நிலையில், அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |