எஸ் ஜே சூர்யா “வதந்தி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
எஸ். ஜே. சூர்யா இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராவார்.
எஸ். ஜே. சூர்யாவின் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் இசை என்ற படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ளார். தற்போது மாநாடு, டான் போன்ற படங்களில் வில்லன் கெட்டப்பில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 போன்ற படங்களிலும் நடிக்கவுள்ளார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் “வதந்தி” எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை புஷ்கர்-காயத்ரி தயாரித்துள்ளனர்.
It’s not a rumour about me…it’s my first web series in @PrimeVideo Vadhandhi. Very happy to share the first look 🥰🥰🥰👍👍👍💐💐💐Catch our new thriller #VadhandhiOnPrime on 2nd December directed by @andrewxvasanth and produced by @PushkarGayatri pic.twitter.com/0JOf5Z7Uz3
— S J Suryah (@iam_SJSuryah) November 17, 2022
இந்த தொடர் தமிழ், ஹிந்தி கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் உருவாக்கியுள்ளது. இதன் வெப் தொடரின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் “வதந்தி” வெப் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து எஸ் ஜே சூர்யா கூறியதாவது, ” இது என்னை பற்றிய வதந்தி அல்ல” என்று கூறியுள்ளார். தற்போது வைரலாகும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.