முந்தைய நாளன்று தயாரித்த பரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடேற்றி புதிது போன்று விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் மாலை, இரவு என இருவேளைகளிலும் பரோட்டாக்களை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம் ஆகும். அந்த உணவகத்தில் தயார் செய்யப்பட்ட பரோட்டாக்கள் விற்பனை ஆகாதபோது அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் ஊறவைத்து, சூடேற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவகத்தில் பழைய பரோட்டாக்களை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவக உரிமையாளருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த உணவகம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
பரோட்டா பிரியர்களே!! இந்த வீடியோவ மிஸ் பண்ணாத பாருங்க pic.twitter.com/5eb1qNWFqM
— வீரா_TVK-MLA/ VEERA_MLA (@star1_blak) December 15, 2021