தமிழகத்தில் கெடுதல் மது விற்கும் போது கள்ளுக்கு மட்டும் ஏன் தடை, அதற்கான தடையை தமிழக அரசு நீக்குவதன் மூலமாக விவசாயிகளின் வருமானம் உயரும் என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் சதியால் மத்திய அரசு திரும்பப் பெற்றது.
அதனை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டால் மட்டும் விவசாயிகளின் வாழ்வில் ஒளி பிறக்காது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் மலிவு விலை மது துவங்கி இன்றுவரை தமிழகத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியாக உள்ளது. அரசுக்கு ஆண்டு வருமானம் மது மூலமாக ரூ.33,811 கோடி கிடைக்கின்றது. இந்த கெடுதலான மதுவால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. கள் சிறந்த உணவாக கருதப்பட்டது. அதற்கான தடையை அரசு நீக்குவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.