Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த டெய்லர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் புத்தேரி ரயில் தண்டவாளம் அருகில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருக்கக் கூடிய பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிள் நின்றதால் அதிலிருந்த ஆவணங்களை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆவணத்தில் சடலமாகக் கிடந்தவர் கட்டையன்விளை பகுதியில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பதும், இவர் டெய்லர் வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதன்பின் சதீஷ் சடலத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே சதீஷின் உடல் தண்டவாளத்தில் மீட்கப்பட்டு இருந்தாலும் அவரது தலையில் மட்டுமே அடிபட்டு இருந்ததால் இச்சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று ரயில்வே காவல் துறையினரிடம் கேட்டபோது அவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்திருக்கவேண்டும் என்றும் அப்போது ரயில் அவர் மீது லேசாக உரசி தலையில் மட்டும் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சதீஷ்குமார் இரவு தன் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு கோபத்தில் மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |