ஆடு, கோழிகள் மற்றும் வாத்து போன்றவை திடீரென உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடு, வாத்துகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றார். இவர் கடந்த 4-ஆம் தேதி தீவனம் போட சென்றபோது 11 கோழிகள், 4 வார்த்தைகள் கட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து செல்வகுமார் உடனடியாக உறவினர்களை வரவழைத்து வெறிநாய் ஏதாவது கடித்து இருக்குமா என்பதை அறிய அப்பகுதி முழுவதையும் தேடச்சொன்னார்.
ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் வேறு ஏதாவது விலங்கு கடித்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்து அவரது குடும்பத்தினர் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஆட்டு கொட்டகையை கண்காணித்து இருந்தனர். அப்போது தொடர் மழை பெய்ததால் அவர்கள் 12 மணிக்கு மேல் வீட்டிற்கு சென்று விட்டனர். அதன் பின் மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கொட்டையிலிருந்து 3 ஆடுகள், 4 வாத்துகள் மற்றும் 5 கோழிகள் கட்டபட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அப்பகுதியில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே காட்டுவிலங்குகள் ஏதாவது வந்து ஆடு, கோழி போன்றவற்றை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.