Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? கால்வாயில் கிடந்த சடலம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சாக்கடை கால்வாயில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள திருவகவுண்டனூர் ரவுண்டானா அருகில் சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த வாலிபர் உடல் மீது கல் ஒன்று கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “சாக்கடை கால்வாயில் சடலமாக கிடந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சனாகுடியை சேர்ந்த சம்சுதீன் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி ஈசாமா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சம்சுதீனின் உறவினர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளனர். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன் அந்த மளிகை கடையில் சம்சுதீன் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது சம்சுதீன் வேலை பார்த்த பணத்தை கொண்டு மது அருந்துவதும், பின் கடையின் வாசலில் படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளார். இதற்கிடையில் சம்சுதீன் சாக்கடை கால்வாயில் எப்படி சடலமாக கிடந்தார்” என்பது தெரியவில்லை. ஆகவே சம்சுதீன் இறந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |