Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்தது…? ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிர் இனங்கள் இறந்து கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள கடற்கரையில் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களானது இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இதில் திஸ்சைட், மார்க்ஸ்கி, சால்ட்பர்ன், நார்த் யார்க்‌ஷ்ரி, டிடன் கர்வி, ஹார்ட்லிபுல் மற்றும் சிஹம் போன்ற கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள், நண்டு, லாப்ஸ்டர் உட்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆகவே கடல் நீரில் விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் ஏதும் கலக்கப்பட்டதா அல்லது மாசுபாட்டால் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியதா என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |