Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல “….! ‘எப்படி வார்னருக்கு தரலாம்’ ….சோயிப் அக்தர் காட்டம் …..!!!

நடப்பு டி20 உலககோப்பை போட்டியில் தொடர் நாயகனுக்கான விருது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.

7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார்.அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த டேவிட் வார்னர் 289 ரன்னுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதோடு நேற்றைய போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த டேவிட் வார்னர் 53 ரன்கள் குவித்தார் .இதனிடையே  நாக் அவுட் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் டேவிட் வார்னருக்கு டி 20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது . இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்ட விருது நியாயமற்றது என தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ,’இத்தொடரின் நாயகனாக பாபர் அசாம் வருவதை காண்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தேன் .ஆனால் இது நிச்சயமாக நியாயமற்ற முடிவு’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |