Categories
தேசிய செய்திகள்

இது வேற மாதிரி பானிபூரி…. இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க…. ட்ரெண்டிங்கில்….!!!!

புதிய அறிமுகமான ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட  விரும்புபவர்கள் குஜராத்திற்கு சென்று சுவைத்து மகிழலாம்.

சத்தான உணவுகளை விடவும் நொறுக்குத் தீனிகளை நாம் அதிகம் வாங்கி சாப்பிடுவோம். அதிலும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இதன் காரணமாக கடைசியில் நாமும் பானி பூரியை சாப்பிடுவதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதற்கு முன்பாக பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் சில மசாலாக்களை கலந்து நமக்கு கொடுப்பார்கள். இதனையடுத்து இனிப்பு பானி பூரி பிரபலமாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 7 வகையான பானி பூரி தண்ணீரை கொண்டு விற்கத் தொடங்கினர். இதை வாரணாசி ஆகிய ஊர்களில் சுவைத்து மகிழலாம். அதன்பின் புதிய முயற்சியாக பானி பூரியில் மதுபானங்கள் கலந்து சாப்பிட தொடங்கினர். இது பலருக்கும் பிடித்ததாக மாறிவிட்டது.

இந்நிலையில் தற்போது இவை எல்லாவற்றுக்கும் மேலாக பானி பூரியின் மேல் நெருப்பை பற்றவைத்து தருகின்றனர். அதாவது பானி பூரியின் மேல் நெருப்பை பற்றவைத்து நேரடியாக உங்களின் வாயிற்குள் இதை போட்டு விடுவார்கள். இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட விரும்பும் நீங்கள் குஜராத்திற்கு சென்று சுவைக்கலாம். இதனிடையில் இந்த பானிபூரி சாப்பிடும் வீடியோவை க்ருபாலினி படேல் என்கிற பெண்மணி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அலகாபாத்திலுள்ள தெரு கடையில் இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை சுவைத்ததாக அவர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பானி பூரியை பற்றவைப்பதற்கு சிறிது கற்பூரத்தை அதன் மீது போடுவதாகவும், க்ருபாலினி தெரிவித்துள்ளார். எனினும் இது சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது தான் என்று கூறியுள்ளார். மேலும் பலர் இந்த பையர் பானி பூரியை  பற்றி வேடிக்கையான கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர் “பானி பூரி வாங்கும்போது மேலும் காரமாக வேண்டும் என நாம் சொல்வோம். அதற்கு நேரடியாக நெருப்பை நமது வாயிலே இப்படி போட்டு விடுகிறார்கள் போல” என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.

Categories

Tech |