Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது மட்டும் நடக்கலான டீம்ல இருந்து விலகிடுவேன் “….! ஸ்ரேயாஸின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!!

அடுத்த ஐபிஎல்  சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் பதவி வழங்கவில்லை என்றால் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலக இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் இத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 புதிய அணிகளுக்கான ஏலம்  துபாயில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ , அகமதாபாத் என்ற புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனிடையே வருகின்ற டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல்-லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கவில்லை என்றால் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த 14-வது சீசன் ஐபிஎல்-லில் காயம் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் டெல்லி அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடவில்லை.ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் பங்கு பெற்று சிறப்பாக விளையாடினார்.

இதில் முதற்பாதியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட்2-வது பாதி  ஆட்டத்திலும் கேப்டனாக தொடர்ந்து நீடித்தார் . இதுகுறித்து ஸ்ரேயாஸ் அய்யர் கூறும்போது,”கேப்டன்சி குறித்து யோசிக்க வேண்டியது அணி நிர்வாகம் தான் அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் “என்று கூறியுள்ளார் . இந்நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் அந்த அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .மேலும் டெல்லி கேப்டன் பொறுப்பை  எதிர்பார்க்கிறார் என தெரிகிறது. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஸ்ரேயாஸ் அய்யர் 7 வருடங்களாக விளையாடி வருகிறார். இதில் 2018 -ஆம் ஆண்டு தொடரின் பாதியில் கம்பீர் கேப்டன் பதவியிலிருந்து  விலகியதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர்  செயல்பட்டு வந்தார் .இவரது தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  ஒரு முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |