Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது மட்டும் உண்மையா இருந்தா’ …! ‘ஐபிஎல்-லில் ராகுல், ரஷித் கான் விளையாட தடை’…? வெளியான பரபரப்பு தகவல் ….!!!

ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுல் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2022 ஐபிஎல் சீசனில் லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்களது அணியில் 4  வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம்  முடிவடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் மற்றும் ஹைதராபாத் அணியில் ரஷித் கான் ஆகிய இருவரும் அணியில் தக்க வைக்கப்படவில்லை .அதேசமயம் அணியிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும், ஏலத்தில் பங்கேற்க விரும்புவதாகவும் கேஎல்.ராகுல் கூறியதையடுத்து அவரை அணியில் தக்க வைக்க வில்லை என பஞ்சாபின் சாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ரஷித் கான் அணியில் சில நிபந்தனைகளை முன் வைத்ததால் அவர் தக்க வைக்கப் படவில்லை என ஹைதராபாத் அணி நிர்வாகமும் விளக்கமளித்துள்ளது .இந்நிலையில் கே.எல். ராகுல் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை புதிய அணியான லக்னோ ஐபிஎல் விதிமுறையை மீறி  தங்கள் அணியிலிருந்து வெளியேற்றி விட்டதாக பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள்       பிசிசிஐ -யிடம்  வாய்மொழியாக புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் கடந்த             2 வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்ராகுலை     ரூபாய் 16 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்க திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் ஆனால் ரூபாய் 20 கோடிக்கு அவரை லக்னோ ஒப்பந்தம் செய்ய பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ரஷித் கான் ஐதராபாத் அணியில் தக்கவைக்க  ரூபாய் 9 கோடிக்கு  முடிவு செய்ததாகவும் ,ஆனால் லக்னோ ரூபாய் 16 கோடிக்கு பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வீரர்கள் மீதும், புதிய அணியான லக்னோ அணி நிர்வாகம் மீதும் எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேசமயம் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோர் மீது விதிமீறல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும் .இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான குற்றச்சாட்டில்  ஜடேஜாவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |