Categories
சினிமா தமிழ் சினிமா

“எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டே தான் இருப்பாங்க”….ஓபனாக பேசிய லேடி சூப்பர் ஸ்டார்…..!!!!

டைரக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளனர். கனெக்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது.

அதன்பின் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இன்றி உருவாகிய இந்த படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடமாகும். இந்த படம் இன்று டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் கனெக்ட் படத்தின் புரொமோஷனுக்காக நயன்தாரா பேட்டி அளித்துள்ளார். அதாவது, அப்போ இல்ல தற்போது வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு திரைப்படத்துலயும் ஒன்னு சொல்றாங்க. உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டேதான் இருப்பாங்க. இதனால் எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்னிடம் என்ன சொல்றாங்களோ அதனை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்” என்று அவர் கூறினார்..

Categories

Tech |