பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பத்தூருக்கு செல்வதற்காக தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறினார். அப்போது மணிமேகலை கையில் வைத்திருந்த 2,800 ரூபாய் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பவுணம்மாள் என்பதும், பணம் மற்றும் செல்போனை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பவுணம்மாளை கைது செய்தனர்