சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் பேட்டை தெருவில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய பொதுக்கழிப்பிடம் அருகில் அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர் கஞ்சா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பிச்சையிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் பிச்சைக்கு திருத்தங்கல் மேற்கு தெருவைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவர் கஞ்சா விற்பனை செய்ய கொடுத்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் பார்த்திபன் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.