Categories
உலக செய்திகள்

இது தவிர வேற வழியில்ல …. வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு …. ஜப்பான் அரசு அதிரடி முடிவு …!!!

டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட  5 நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு கூடுதலாக பரிசோதனை நடத்த  ஜப்பான் அரசு  திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவல் இன்னும்  நீங்காத நிலையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு 4  நாட்களில் இரண்டு முறை கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் முடிவு வந்த பிறகே போட்டி நடக்கும் இடத்திற்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியா உட்பட 5  நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட 5 நாடுகளில் இருந்து போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது . இந்த கட்டுபாட்டில் தினந்தோறும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டிவ் முடிவு வந்த பிறகே அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |