சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த சீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் சரகத்திற்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அருகில் பணம் வைத்து சூதாடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், சீமை சாமி, கண்ணன், இளையராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 620 ரூபாய் மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்துள்ளனர்.