Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? மாட்டி கொண்ட 21 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கெட்டவாடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசப்பன், தனிப்பிரிவு காவலர் ராஜா மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து சூதாட்டம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 21 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டு சிலர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த குருசாமி, நாகேந்திரா, கிருஷ்ணா அணில், கார்த்திக், திலீப் உட்பட 20 பேர் என்பதும், அவர்கள் அங்குள்ள கொங்கள்ளி கோவிலுக்கு சென்றுவிட்டு கெட்டவாடி அடுத்த மலையன்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பப்பா என்பவர் தோட்டத்து வீட்டிற்கு வந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து சுப்பப்பா உட்பட 20 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 1 லட்சத்து 15 ஆயிரத்து 860 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த 3 கார்கள், ஒரு சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம் என 5 வாகனங்கள் மற்றும் 19 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |