அம்மன் கோவிலின் அருகில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் திருத்தங்கல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவில் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பாண்டி, முத்து முருகன், கருத்தப்பாண்டி, முருகேசன், மாரிச்சாமி போன்றோரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.