Categories
உலக செய்திகள்

“எதுக்குடா இப்படி பண்றீங்க”… உடல் சிதறி பறிபோன உயிர்…. ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பு….!!!

காபூலில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தனர். அப்போது முதல் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களை குறிவைத்தும், ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காபூலின் மேற்கு பகுதியிலுள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் மினி பஸ் ஒன்றில் குண்டு வெடித்து சிதறியது. இதனால் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 நபர்கள் காயமடைந்தனர். இதனிடையில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்ற அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார். இவ்வாறு அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Categories

Tech |