நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 191 ரன்களை குவித்தது. குறிப்பாக ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். பின் களமிறங்கிய ஆர்சிபி அணி , 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் இறுதியில் 122 ரன்களை எடுத்து , ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. எனவே 69 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது, நாங்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் , பாசிட்டிவ் விஷயங்களை கற்றுக் கொண்டோம் என்றார். தொடக்கத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம் , ஆனால் இறுதி ஓவரில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது என்றார். ஹர்ஷல் பட்டேல் பந்துவீசிய 20 ஓவரில் , ஜடேஜாவுக்கு ரன்களை விட்டுக் கொடுத்தார். எனவே இவர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததால் , அவரை அணியிலிருந்து நீக்க மாட்டோம் , என்று விராட் கோலி தெரிவித்தார் .அதோடு ஹர்ஷல் பட்டேல் ஆட்டத்தின் துவக்கத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனை காரணமாக வைத்து ஹர்ஷல் பட்டேலை அணியிலிருந்து, நீக்க முடியாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.