Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணீங்க…. சத்தம் கேட்டு வந்த மக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தெரு நாயை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள லிங்க கவுண்டன் வலசு பகுதியில் கார் மெக்கானிக்காக மூர்த்தி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் இருக்கிறது. இந்த விவசாய தோட்டத்திற்குள் தெருநாய் ஒன்று புகுந்ததால் மூர்த்தி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அதை சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த நாய் வலி தாங்க முடியாமல் சத்தமிட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து நாயை எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு மூர்த்தி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பூந்துறை சேமூர் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அதன்பின் தமிழ்செல்வன் இதுதொடர்பாக மூர்த்தியை தட்டி கேட்டபோது அவரையும் தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுடப்பட்ட தெருநாயை காவல்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |