Categories
உலக செய்திகள்

இதுக்கு முன்னாடியே விபத்து நடந்துருக்கு …. 28 பேரின் உயிரை காவு வாங்கிய விமானம் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

ரஷ்யாவில் கடலில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 28 பேரும் உயிரிழந்துள்ளனர் .

ரஷ்யாவில்  பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கி  நகரில் இருந்து பலானா நகருக்கு ஆன்டனோவ் ஆன்-26 என்ற வகை விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றது .இந்த விமானத்தில் 22 பயணிகள் ,6 விமானிகள் உட்பட 28 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பலானா விமான நிலையத்துடனான தொடர்பு  துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் பலானா விமான நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது மாயமாகி உள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்த போது விமானத்தின் சிதறிய பாகங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் , இதனால் இந்த விமானத்தில் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மோகிரேவாவும் இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் விபத்துக்குள்ளான விமானம் காம்சாட்ஸ்கி ஏவியேஷன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் கடந்த 1982-ஆம் ஆண்டு முதல்  இயக்கப்பட்டு வருகிறது .இதற்கு முன்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கி  நகரில் இருந்து ஆன்டனோவ் ஆன்-26 விமானம் பலானாவுக்கு வந்துகொண்டிருந்தபோது  மலையின் மீது மோதி விபத்துக்குள்ளாதில்  10 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த விமானிகள் இருவரும் மது அருந்தி இருந்தனர் என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

Categories

Tech |