ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் மாற்றம் நிகழ்த்தப்படுமா என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் உருமாறிய உள்ள ‘பி.1.617.2’ என்ற கொரோனா வைரசுக்கு ‘டெல்டா ‘வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த உருமாறிய வைரசுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது . இந்நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் ‘டெல்டா’ வகை வைரசுக்கு ஏற்றவாறு மருந்து கலவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்த ரஷியாவின் கமலேயா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கூறுகையில்,”ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்க நீண்ட காலம் ஆகும். குறிப்பாக தடுப்பூசியை உருவாக்க அறிவியல் வகையில் 10 நாட்களும், ஒழுங்குமுறை வகையில் 3 முதல் 4 மாதங்களும் ஆகும் . ஆனால் அதற்குள் வைரஸ் உருமாறி புதிய வகை வைரஸ் தோன்றிவிடும் . எனவே இதுபோன்ற உருமாற்றம் நிகழக்கூடிய சூழலில் புதிய வைரஸ்களுக்கு தடுப்பூசிகளை தயாரிப்பது என்பது சாத்தியமற்றது. இப்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் பராமரிப்பது போதுமானது.ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருந்து கலலையில் எந்தவித மாற்றமும் நிகழ்த்தப்படாது”என அவர் கூறினார்.